மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
14-Dec-2025
சென்னை:துாத்துக்குடி மாவட்டம், வ.உ.சி., துறைமுகம் அருகில் மின் வாரியத்துக்கு, துாத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், தென் மாவட்ட மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.தென்காசி, துாத்துக்குடி உட்பட நான்கு மாவட்டங்களில், 2023 டிச., 16, 17ல் பெய்த அதீத கன மழையால், துாத்துக்குடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் துாத்துக்குடி அனல் மின் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது.அங்குள்ள ஐந்து அலகுகளிலும் அம்மாதம், 17ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்திற்கு பின், தண்ணீரை அகற்றும் பணியில் பொறியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.கடந்த டிச., 31ல் நான்காவது மற்றும் ஐந்தாவது அலகுகளில் மின் உற்பத்தி துவங்கியது. மேலும், முதலாவது, மூன்றாவது அலகுகளில் கடந்த 10ம் தேதியும், இரண்டாவது அலகில் கடந்த 16ம் தேதியும் மின் உற்பத்தி துவங்கியது.தற்போது ஐந்து அலகுகளிலும் மின் உற்பத்தி நடக்கிறது.
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025
14-Dec-2025