உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விளாத்திகுளம் யூனியனில் 51 பஞ்.,களில் கிராமசபை கூட்டம்

விளாத்திகுளம் யூனியனில் 51 பஞ்.,களில் கிராமசபை கூட்டம்

விளாத்திகுளம் : விளாத்திகுளம் யூனியனில் உள்ள 51 கிராம பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.2011 மே முதல் நாள் தொழிலாளர் தினத்தன்று நடத்த வேண்டிய கிராமசபை கூட்டம் சட்டசபை பொதுத்தேர்தல் காரணமாக நேற்று காலை 11 மணிக்கு நடத்த சுற்றறிக்கை வந்ததை தொடர்ந்து விளாத்திகுளம் யூனியனில் உள்ள 51 கிராம பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் பஞ்.,தலைவர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2011-12ம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் பட்டியல் தயார் செய்து ஒப்புதல் பெறுதல், மதிப்பீடு, பணிகளின் எண்ணிக்கை, உத்தேச மதிப்பீடு சமூக தணிக்கை திட்டம் குறித்து விவாதித்தல் மற்றும் 2011 ஜனவரி முதல் ஜூன் வரை பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் உட்பட பல பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விளாத்திகுளம் யூனியனில் உள்ள கிராம பஞ்.,களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் சுனாமி உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வன், வட்ட வளர்ச்சி அலுவலர் (பஞ்.,) சங்கர நாராயணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி