உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / காற்றாலை நிறுவன கிரேன் தீக்கிரை

காற்றாலை நிறுவன கிரேன் தீக்கிரை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. துாத்துக்குடி துறைமுகத்திலிருந்து எப்போதும்வென்றானில் உள்ள காற்றாலை நிறுவனத்திற்கு கிரேனுடன் கூடிய லாரி சென்றது. குறுக்குச்சாலை பகுதியில் சென்றபோது மதியம் 2:15 மணிக்கு லாரி திடீரென தீப்பற்றியது. வட மாநிலத்தைச் சேர்ந்த அதன் டிரைவர் இறங்கி தீயை அணைக்க முயற்சித்தார். இருப்பினும் தீ மளமளவென எரிய துவங்கியது. துாத்துக்குடி சிப்காட் மற்றும் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கிரேன் லாரி முழுவதும் தீக்கிரையானது. எப்போதும்வென்றான் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை