மேலும் செய்திகள்
மது போதையில் தகராறு; தொழிலாளி அடித்து கொலை
10-Dec-2024
துாத்துக்குடி : முறப்பநாடு அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நண்பரை போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அனவரதநல்லுாரை சேர்ந்த சுடலைமாடன் மகன் மகாராஜன் 35. அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் முத்துக்குமார் 19. கட்டட தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவில் இருவரும் மது அருந்தினர்.அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. முத்துக்குமார், அரிவாளால் மகாராஜனை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த மகாராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முறப்பநாடு போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். இறந்த மகாராஜனுக்கு மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
10-Dec-2024