மேலும் செய்திகள்
போதையில் சண்டை வாலிபர் அடித்து கொலை
10-Aug-2025
துாத்துக்குடி: டாஸ்மாக் பாரில் மது அருந்திய போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், கேரளாவை சேர்ந்த தொழிலாளி பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த பிஜூ, 57, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தார். அப்போது, சாத்தான்குளம் அருகே ஞானியார்குடியிருப்பை சேர்ந்த சித்திரைமுத்து, 56, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி அமுதுண்ணாகுடி கிராமத்தின் மதுக்கடை அருகே உள்ள பாரில் அடிக்கடி மது அருந்தி வந்தனர். கோவில் விழா நடந்ததால் நேற்று மதியம் பிஜூவும், சித்திரைமுத்துவும் ஒன்றாக சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்தனர். திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சித்திரைமுத்து பீர் பாட்டிலை உடைத்து பிஜூவின் கழுத்தில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த பிஜூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாத்தான்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, சித்திரைமுத்துவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
10-Aug-2025