உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ரத்தம் சொட்ட சொட்ட வந்த ஆட்டுத்தோல் லாரி முற்றுகை

ரத்தம் சொட்ட சொட்ட வந்த ஆட்டுத்தோல் லாரி முற்றுகை

வாணியம்பாடி:வாணியம்பாடி அருகே, தோல் தொழிற்சாலைக்கு ஆட்டுத்தோல் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டு, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை உள்ளது. இதைச் சுற்றி, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு, தோல் தொழிற்சாலைக்கு தோல்களை லாரியில் ஏற்றி வந்தபோது, ரத்தம் சொட்டச் சொட்ட வீதிகளில் லாரி சென்றதால், துர்நாற்றம் வீசி, அனைவருக்கும் சுவாச பாதிப்பு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென தோல் ஏற்றி வந்த லாரி, தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ