உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க., நிர்வாகி கைது

செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க., நிர்வாகி கைது

வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் பகுதியை சேர்ந்தவர் கோபி, 44; வாணியம்பாடியை சேர்ந்த அ.தி.முக., நகர துணை செயலரும், இரும்பு வியாபாரியுமான கோவிந்தன், 40, கடந்த, 2020ல், 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். பணத்தை கோபி கேட்ட நிலையில், இரண்டு காசோலை தந்துள்ளார். வங்கியில் கோபி செலுத்தியபோது, வங்கி கணக்கில் பணம் இல்லை என, திரும்பி வந்துள்ளது.இதனால் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில், கோபி வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்கு சரிவர ஆஜராகாத கோவிந்தனுக்கு, 6 மாத சிறை தண்டனையுடன் கூடிய பிடிவாரன்ட் பிறப்பித்து, வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரசுந்தா உத்தரவிட்டார். அதன்படி, கோவிந்தனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை