உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / பாலியல் தொல்லை ஏட்டு கைது

பாலியல் தொல்லை ஏட்டு கைது

திருப்பத்துார் : திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த சந்தவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 51; திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏட்டு.எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரியும் உறவினரான பெண் எஸ்.ஐ.,யை பார்க்க, நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த திருமணமான பெண் அடிக்கடி வருவார். அப்போது, அப்பெண்ணுக்கும், நாராயணசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பெண்ணை போலீசில் சேருமாறும், தான் உதவுவதாகவும் கூறி, திருப்பத்துாரில் தனியார் போலீஸ் பயற்சி மையத்தில் நாராயணசாமி சேர்த்துள்ளார். இரு நாட்களுக்கு முன், திருப்பத்துாரில் ஹோட்டலுக்கு இருவரும் சாப்பிட சென்றனர். அப்போது, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசார், நாராயணசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ