உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / காப்புக்காட்டில் கரடி நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

காப்புக்காட்டில் கரடி நடமாட்டம் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் வனப்பகுதிகள் உள்ளன. இதில், ஏலகிரி மலை, ஜவ்வாதுமலை, மாத கடப்பா, நெக்னாமலை, காவலுார், பனங்காட்டேரி உள்ளிட்டவை அடர்ந்த வனப்பகுதிகள். இங்கு கரடி, மான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, முயல், மலைப்பாம்பு உள்ளிட்ட வன உயிரினங்களும், அரியவகை பறவைகளும் உள்ளன.சுற்றுலா தலமான ஏலகிரி மலை காப்புக்காட்டில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தண்ணீர் தேடி, மலை அடிவார குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி வருகின்றன. வனப்பகுதிகளிலும் அதிகம் சுற்றித் திரிகின்றன. இதனால் சுற்றுலா பயணியர் அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது. மீறி செல்வது அல்லது வன உயிரினங்களை துன்புறுத்தும் செயலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஏலகிரி வனச்சரக அலுவலர் சோழராஜன் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை