உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ஆம்பூரில் பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

ஆம்பூரில் பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

ஆம்பூர்:திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மற்றும், திருவண்ணாமலை மாவட்டங்களில், இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டில், 44.4 டிகிரி செல்ஷியல், 112 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் பகலில் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், வறண்டு கிடந்த பச்சக்குப்பம் பகுதி பாலாற்றில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி