உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ரயிலில் இருந்து தவறி விழுந்து ஐ.டி., ஊழியர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஐ.டி., ஊழியர் பலி

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த விண்ணமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் நேற்று முன்தினம் இரவு கிடப்பதாக, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவர் தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளியை சேர்ந்த ஐ.டி., ஊழியர் கோகுல், 23, என்பது தெரியவந்தது.நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து அரூருக்கு செல்வதற்காக, ரயிலில் பயணம் செய்யும்போது, தவறி கீழே விழுந்து பலியானது தெரியவந்தது. இது குறித்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ