உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மனைவி காதை அறுத்து தப்பிய கணவனுக்கு வலை

மனைவி காதை அறுத்து தப்பிய கணவனுக்கு வலை

ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புதுார் அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலாளி பொன்னப்பன், 36. இவர், ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்த புனிதா, 31, என்பவரை, 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தொடர்ந்த விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், கணவனை பிரிந்து, வக்கணம்பட்டியில் உள்ள தன் தாய் வீட்டில் ஓராண்டாக புனிதா வசித்து வருகிறார். கடந்த, 5ம் தேதி ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் சாலையில், புனிதா நின்று கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த பொன்னப்பன், மனைவியை சரமாரியாக தாக்கி, கத்தியால் மனைவி காதை அறுத்து விட்டு தப்பினார்.படுகாயமடைந்த புனிதா, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜோலார்பேட்டை போலீசார் பொன்னப்பனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி