உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / லாரி மோதி விபத்து போலீஸ்காரர் பலி

லாரி மோதி விபத்து போலீஸ்காரர் பலி

ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம் மாதனுார் அடுத்த அகரத்தை சேர்ந்தவர் மாஜி ராணுவ வீரர் தட்சிணாமூர்த்தி, 48. இவர் மனைவி பரிமளா, 42. ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். தேர்தல் பணி தொடர்பாக நேற்று முன்தினம் மாலை திருப்பத்துார் சென்றுவிட்டு தட்சணாமூர்த்தியுடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் அகரம் நோக்கி சென்றார்.அப்போது அகரம் கால்நடை மருத்துவமனை அருகே எதிரே வந்த ஆட்டோ தட்சணாமூர்த்தி பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி தட்சணாமூர்த்தி மற்றும் பரிமளா சாலையில் விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் பரிமளா சம்பவ இடத்திலேயே பலியானார். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ