உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / 30 பெண்கள் பெயரில் ரூ.35 லட்சம் கடன் தலைமறைவு மகளிர் குழு தலைவிக்கு வலை

30 பெண்கள் பெயரில் ரூ.35 லட்சம் கடன் தலைமறைவு மகளிர் குழு தலைவிக்கு வலை

திருப்பத்துார், :திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயா, 30. இவரின் மனைவி மார்த்தா, 27. இவர், அதே பகுதியில் வசிக்கும் வறுமை நிலையிலுள்ள பெண்களை, மகளிர் சுயஉதவி குழுவில் சேர்த்து, வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறினார். அதற்காக அவர்களிடமிருந்து, ஆதார், ரேஷன், பான் மற்றும் வங்கி ஏ.டி.எம்., கார்டு பெற்றார்.அந்த ஆவணங்களை, தனியார் நிதி நிறுவனங்களிடம் கொடுத்து, 30,000 ரூபாய் முதல், 1.75 லட்சம் ரூபாய் வரை, 30க்கும் மேற்பட்ட பெண்கள் பெயரில், 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.அதை அவர்களிடம் ஒப்படைக்காத மார்த்தா, தன் கணவருடன் இரண்டு மாதங்களாக தலைமறைவாகி விட்டார்.கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், கடன் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட பெண்களின் வீடுகளுக்கு ‍சென்று, அப்பெண்களிடம், கடன் தொகையை திருப்பி செலுத்தக் கூறினர்.அதிர்ச்சியடைந்தபெண்கள், 'ஆவணங்களை பெற்ற மார்த்தா, லோன் வாங்கி தருவதாக கூறினார். ஆனால், பணம் எதுவும் தரவில்லை' என்றனர். அதற்கு தனியார் நிதிநிறுவன ஊழியர்கள், 'உங்கள் பெயரில் தான் கடன் கொடுத்துள்ளோம். ஆகையால், நீங்கள் தான் அதை செலுத்த வேண்டும்' என்றனர். அதிர்ச்சியடைந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று, வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.இதையடுத்து, தலைமறைவான மார்த்தா மற்றும் அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை