மேலும் செய்திகள்
பள்ளி மாணவி கடத்தல்? ஆம்பூர் அருகே பரபரப்பு
13-Dec-2025
கணவனை இழந்த பெண் வெட்டி கொலை
13-Dec-2025
லாரி மீது கார் மோதல் : மாமியார், மருமகன் பலி
02-Dec-2025
வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த இந்திரா நகரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 125க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, 3 அடி நீள நாகப்பாம்பு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்தது. இதை பார்த்த மாணவ - மாணவியர் வகுப்பறையிலிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, வகுப்பறையில் இருந்த பாம்பை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். பள்ளியை சுற்றி முட்புதர்கள் மண்டி உள்ளதால், அங்கிருந்து பாம்பு வகுப்பறைக்குள் புகுந்தது தெரியவந்தது. பள்ளி வளாகத்தில் மண்டிய முட்புதர்களை அகற்றி துாய்மைப்படுத்த, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
13-Dec-2025
13-Dec-2025
02-Dec-2025