மேலும் செய்திகள்
டாக்டர் வீட்டில் 66 சவரன் திருடிய பணிப்பெண் கைது
27-Sep-2024
நாட்றம்பள்ளி:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளியைச் சேர்ந்தவர் வினாயகம், 52, நகைக்கடை உரிமையாளர். நேற்று முன்தினம் மாலை, இவர் தன் மகன் சச்சின், 22, என்பவரை கடையில் விட்டு திருப்பத்துாருக்கு சொந்த வேலை காரணமாக சென்றார். அப்போது அந்த கடைக்கு வந்த பெண் ஒருவர், தனக்கு கம்மல் வேண்டும் என கூறி நகைகளை காண்பிக்க கூறினார். கடையிலிருந்த நகைகளை எடுத்து மேசையின் மீது வைத்து, சச்சின் காண்பித்துள்ளார்.கண்ணிமைக்கும் நேரத்தில், 21 சவரன் நகைகளை திருடிய அப்பெண், வேறு டிசைன் நகைகள் வாங்க போகிறேன் என கூறி தப்பி சென்றார். அவர் சென்ற பிறகு, நகையை கணக்கிட்ட போது, திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி, நாட்றம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Sep-2024