மாணவியை காதலிக்க வற்புறுத்திய 4 வாலிபர்கள் போக்சோவில் கைது
ஜோலார்பேட்டை:ஜோலார்பேட்டையில், பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய, 4 வாலிபர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் பிரசாந்த், 26. இவர், ஜோலார்பேட்டை அரசு பள்ளியில் படிக்கும், 17 வயது மாணவியை, தினமும் வழியில் மடக்கி, தன்னை காதலிக்க வற்புறுத்தி வந்தார். மாணவி மறுத்து வந்த நிலையில், வாலிபருக்கு ஆதரவாக அவரது நண்பர்களான, அச்சமங்கலம் முக்கேஷ், 27, பரத், 25, மற்றும் புள்ளானேரி மேகநாதன், 25, ஆகிய மூன்று பேரும், மாணவியிடம், பிரசாந்தை காதலிக்க வற்புறுத்தினர். இது குறித்து மாணவி, தன் பெற்றோரிடம் கூறினார். அவர்கள் புகார் படி, ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து, பிரசாந்த் உள்ளிட்ட, 4 பேரை போக்சோவில் கைது செய்தனர்.