உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / சேலை ஊஞ்சலில் விளையாடிய மாணவி கழுத்து இறுகி பலி

சேலை ஊஞ்சலில் விளையாடிய மாணவி கழுத்து இறுகி பலி

வாணியம்பாடி,:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 43, கட்டட மேஸ்திரி. இவரது மனைவி ஜெயந்தி, 40. இவர்களது மகள் ரூபிகா, 14, தும்பேரி அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் வழக்கம் போல, கட்டட வேலைக்கு, வேலு சென்று விட்டார். மேய்ச்சலுக்கு ஆடுகளை ஜெயந்தி ஓட்டிச் சென்றார். மாணவி ரூபிகா, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து, கொட்டகையில் சேலையால் கட்டிய ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, சேலை கழுத்தை இறுக்கியதில் மயங்கினார். ஆடு மேய்த்து விட்டு அன்றிரவு, 7:00 மணிக்கு ஜெயந்தி வீடு திரும்பினார். அப்போது ஊஞ்சலில் மயங்கிய நிலையில் இருந்த மகளை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி