உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ரூ.1.61 கோடி வரி ஏய்ப்பா? டீக்கடை தொழிலாளி அதிர்ச்சி

ரூ.1.61 கோடி வரி ஏய்ப்பா? டீக்கடை தொழிலாளி அதிர்ச்சி

வாணியம்பாடி: டீக்கடை தொழிலாளி, 1.61 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, பெரியபேட்டையைச் சேர்ந்தவர் முகமது பைசன், 27; டீக்கடை தொழிலாளி. பைசனுக்கு, சென்னை ஜி.எஸ்.டி., ஆணையத்திலிருந்து சில நாட்களுக்கு முன் ஒரு கடிதம் வந்தது. அதில், 'சென்னையில், 2022 முதல் எஸ்.ஆர்.எப்., டிரேடர்ஸ் பெயரில் தோல் தொழிற்சாலை இயந்திரங்கள் விற்பனை மற்றும் பராமரிப்பு தொழில் செய்த வகையில் முறையாக ஜி.எஸ்.டி., செலுத்தாததால் அபராத தொகையுடன் அரசுக்கு செலுத்த வேண்டிய 1 கோடியே, 61 லட்சத்து, 46,000 ரூபாய் வரி பாக்கியை செலுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பைசன், திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தன் ஆதார் எண், பான் எண்ணை தவறாக பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், விசா ரித்து நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி