உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / சிறுவனை கடத்தி கொலை தொழிலாளிக்கு ஆயுள்

சிறுவனை கடத்தி கொலை தொழிலாளிக்கு ஆயுள்

ஜோலார்பேட்டை,: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அத்தனாவூரை சேர்ந்தவர் குட்டி, 50; பைனான்ஸ் தொழில் செய்யும் இவர், அப்பகுதி கூலித்தொழிலாளி பெருமாள், 42, என்பவருக்கு, 10,000 ரூபாய் கடன் கொடுத்தார்.கடந்த, 2023 டிச., 16ல் பெருமாள் பைக்கை குட்டி பறிக்க, பணத்தை கொடுத்து விட்டு பெருமாள் பைக்கை மீட்டார். இதற்கு பழிவாங்க, குட்டியின் 8 வயது மகன் ராகேஷை, 2023 டிச., 20ல், தன் கள்ளக்காதலி காளியம்மாள், 39, என்பவருடன் சேர்ந்து, ஓகேனக்கல்லுக்கு காரில் கடத்தி, கழுத்தை நெரித்து கொன்று, சடலத்தை காவிரி ஆற்றில் வீசினார். ஏலகிரி போலீசார், பெருமாள், காளியம்மாளை கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, பெருமாளுக்கு, ஆயுள் தண்டனை, கடத்தலில் ஈடுபட்டதற்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். காளியம்மாள் விடுதலை ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை