உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை

திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே, காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை, 20 நாளில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்துார் அடுத்த மிட்டூரை சேர்ந்தவர் மரப்பட்டறை தொழிலாளி மணிகண்டன், 25; இவர், ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த, 19 வயது பெண்ணை, இரண்டு வருடங்களாக காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கடந்த, 20 நாட்களுக்கு முன் இருவரும், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின், திருப்பத்துாரில் தனியாக வாடகை வீட்டில் வசித்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், சாப்பிட்டு விட்டு இருவரும் துாங்கச் சென்றனர். நேற்று காலை வீட்டின் மற்றொரு அறையில் மணிகண்டன், மின்விசிறியில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ