உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / சத்தியம் செய்த எம்.எல்.ஏ.,வை கண்டித்து பொதுமக்கள் தர்ணா

சத்தியம் செய்த எம்.எல்.ஏ.,வை கண்டித்து பொதுமக்கள் தர்ணா

திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அம்பேத்கர் நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அடிப்படை வசதி மற்றும் வீட்டுமனை பட்டா கோரி, நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. இதை கண்டித்து, நேற்று வி.ஏ.ஓ., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து, தர்ணாவில் ஈடுபட்டோர் கூறுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலின்போது, இப்பகுதிக்கு ஓட்டு கேட்க வந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., தேவராஜ், இங்குள்ள மாரியம்மன் கோவில் முன், கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து, 'என்னை வெற்றி பெற வைத்தால், உங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார். அதை நம்பி ஓட்டு போட்டோம். அவர் வெற்றி பெற்ற பின், இதுவரை ஒருமுறை கூட எங்கள் பகுதிக்கு வரவில்லை' என்றனர். அவர்களிடம் நாட்றம்பள்ளி தாசில்தார் காஞ்சனா, நாட்றம்பள்ளி போலீசார் சமாதான பேச்சு நடத்தினர். அதை ஏற்காமல், கோரிக்கையை நிறைவேற்றும் வரையில், தர்ணா தொடரும் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

duruvasar
அக் 08, 2025 08:22

523 தலைமை கழக உடான்ஸுகள் .லோக்கலாக எவ்வளவு என்பது அந்தந்த பகுதி மக்களுக்குத்தான் தெரியும். அது போக இந்த முறை 1000 ரூபாய் கூட்டி கொடுத்தால் ஓகே தான்.


raja
அக் 08, 2025 08:18

ஓ.. அந்த நகரா...சரி சரி அப்போ ஒரு குவார்ட்டர் ஒரு கோழி பிரியாணி தேர்தல் அன்று உறுதியாக கிடைக்கும்...


SRIDHAAR.R
அக் 08, 2025 07:42

சரி சரி


GSR
அக் 08, 2025 07:13

அடுத்த எலெக்சன்ல அவருக்கு தான் ஓட்டு போடுவீங்க. அப்புறம் எதுக்கு வீம்பு ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை