உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீர் :பூட்டு போட்டு பெற்றோர் போராட்டம்

அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீர் :பூட்டு போட்டு பெற்றோர் போராட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்குவதை கண்டித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு, மாணவர்களுடன் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்துார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வாணியம்பாடி நியூ டவுன் காந்தி நகர், அரசு நகராட்சி மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி மாணவர்கள், ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், 3 நாட்களாக இரவில் பெய்யும் மழையால், பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதில் ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று காலை, மழை நீரை அகற்றக்கோரி, தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கு பூட்டு போட்டு, நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் வாணியம்பாடி டவுன் போலீசார், பேச்சு நடத்தி, பள்ளி வளாகத்தில் இனி மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.கோவிலுக்குள் மழைநீர் கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், கடை வீதி மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் இருந்து அதிகளவு மழை நீர் வெளியேறியது. இந்த மழை நீர், பூவராக சுவாமி கோவிலின் முன்புறம் பிரதான வாயில் வழியாக கோவிலுக்குள் புகுந்து, குழந்தையம்மன் சன்னிதியில் முழங்கால் அளவிற்கு தேங்கியதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.வாழை மரங்கள் நாசம்புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் பெய்த மழையால், 300 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் முழுமையாக சாய்ந்து சேதமடைந்தன.அணைகளில் நீர் திறப்புகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று காலை நீர்வரத்து, 1,124 கன அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,036 கன அடி, வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம், கமண்டலாற்றின் குறுக்கே அமைந்துள்ள செண்பகதோப்பு அணை, தற்போது பெய்து வரும் மழையால் வேகமாக நிரம்பி வருவதால், நேற்று மாலை, 3:00 மணியிலிருந்து அணையிலிருந்து, 150 கன அடி நீர் திறக்கப்பட்டது. 5 கிராம மக்கள் அவதிதிருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில், மூன்று மணி நேரம் பெய்த மழைால், ரெட்டி தோப்பு ரயில்வே தரைப்பாலத்தில், 6 அடி அளவிற்கு நீர் தேங்கியது. இதனால், தரைப்பாலத்தை கடந்து சென்ற பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.மேலும், ரெட்டிதோப்பு, மாங்காதோப்பு, பெத்லகேம், நாயக்கனேரி, காமனுார் தட்டு உள்ளிட்ட மலை கிராம மக்கள், 3 கி.மீ., துாரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ