நிலத்தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்ற மகன் கைது
திருப்பத்துார்; திருப்பத்துார் அருகே நிலத்தகராறில், சித்தப்பாவை, அரிவாளால் வெட்டி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அடுத்த ஆவல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மாது, 55. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் பூபதிக்கும் நிலத்தகராறு இருந்தது. செப்., 24ல் காக்கங்கரை பஸ் ஸ்டாண்டில் மாது நின்றிருந்தார். அங்கு வந்த பூபதியின் மகன் திருப்பதி, 25, மாதுவிடம் தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி தப்பினார். படுகாயமடைந்த மாது, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். கந்திலி போலீசார், திருப்பதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.