மேலும் செய்திகள்
4 பேரால் வாலிபர் கொலை
29-Jan-2025
கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயம்
18-Jan-2025
வாணியம்பாடி; திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லங்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் பிரசன்னா, 13; ராமநாயக்கன்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது சித்தப்பா பிரகாசம், 40; டிராக்டர் ஓட்டி வருகிறார். நேற்று பாலன் வட்டம் பகுதியிலுள்ள வயலில், உழவுப் பணிக்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார். மாணவன் பிரசன்னா டிராக்டரின் பின்னால் அமர்ந்து சென்றான். வழியில் ஸ்டேரிங் துண்டானதில் நிலை தடுமாறிய டிராக்டர் கவிழ்ந்தது. இதில், டிராக்டருக்கு அடியில் சிக்கிய பிரசன்னா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பிரகாசம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Jan-2025
18-Jan-2025