உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் அச்சடிக்க ஆயத்தம்

வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் அச்சடிக்க ஆயத்தம்

திருப்பூர் :உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கும் பூத் ஸ்லிப் அச்சடிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் தயாராகி வருகின்றன.தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, இதற்கான பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் தயாராகி வருகின்றன. கடந்த 22ம் தேதி முதல் வேட்பு மனு பெறப்படுகிறது. போட்டோவுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த சட்டசபை தேர்தல் போல், உள்ளாட்சி தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்க தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தல் கமிஷனே பூத் ஸ்லிப் வழங்குவதால் அரசியல் கட்சிகள் பூத் ஸ்லிப் வழங்க வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பகுதிவாரியாக அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும் உரிய வாக்காளர் குறித்த விவரங்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளபடி பிரின்ட் செய்து, வாக்காளர்களுக்கு வழங்கப் பட உள்ளது. இதை ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாகச் சென்று வழங்குவர். இந்த பூத் ஸ்லிப் கிடைக்காத வாக்காளர்கள், ஓட்டுப்பதிவு நாளில், அந்தந்த ஓட்டுச் சாவடிகளின் முன் புறம் பெற்று கொள்ளலாம். இதற்கான ஏற்பாட்டை, தேர்தல் கமிஷன் செய்துள்ளது.பூத் ஸ்லிப்பில் உள்ள விவரங்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து எடுத்து அச்சடிக்கப்படுகிறது; ஏற்கனவே கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு பட்டியலில் உள்ள விவரங்கள் அச்சிட்டு வழங்கப்படுகிறது. இதற்காக விவரங்களை சேகரித்து சரிபார்க்கும் பணியில் உள் ளாட்சி அமைப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுப் பதிவுக்கு குறைந்த பட்சம் 2 அல்லது 3 நாள் முன்னதாக இவை வினியோகிக்கப்படும்.நெய்தல் அங்காடிகளில் மீன் விற்பனை மந்தம்

திருப்பூர் :புரட்டாசி மாத வழிபாடு காரணமாக திருப்பூரில் உள்ள நெய்தல் அங்காடிகளில், மீன்விற்பனை மந்தமடைந்துள்ளது.தமிழக மீன்வளர்ச்சித்துறையின் கீழ் திருப்பூரில் நெய்தல் அங்காடிகள் செயல்படுகின்றன; கடந்த ஒரு மாதமாக ஆற்றுமீன், கடல் மீன் விற்பனை அங்காடிகளில் அமோகமாக நடந்து வந்தது. வெளிமார்க்கெட்டுகளில் அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டாலும், நெய்தல் அங்காடிகளில் தொடர்ந்து மீன் கிடைப்பதால், திருப்பூர் குமார் நகரில் உள்ள நெய்தல் அங்காடியில் தினமும் 500 கிலோ; புஷ்பா தியேட்டர் பகுதி அங்காடியில் 100 கிலோ; வீரபாண்டி மற்றும் அவிநாசி அங்காடிகளில் 40 முதல் 50 கிலோ வரை மீன் விற்பனை நடந்தது.புரட்டாசி மாதம் துவங்கியதால், அசைவ பிரியர்கள் பலரும், சைவத்துக்கு மாறிவிட்டனர். பலரும் மீன் உணவை தவிர்ப்பதால், நெய்தல் மீன் அங்காடிகளில் நுகர்வோர் வரத்து குறைந்துள்ளது. திருப்பூர், அவிநாசி, வீரபாண்டி, குமார் நகர் பகுதிகளில் உள்ள அங்காடிகளில் மொத்தமாக, 250 கிலோ மீன் மட்டுமே விற்பனையாகிறது.விற்பனையக நிர்வாகிகள் கூறுகையில், 'புரட்டாசி மாதம் துவங்கியதால், கோவில் விஷேசங்கள், நவராத்திரி விரதம் காரணமாக பொதுமக்களில் பலரும், மீன் உணவை தவிர்க்கின்றனர். வீணாவதை தவிர்க்கும் வகையில் ஓட்டல்களுக் கும் மிககுறைவாகவே மீன்வாங்கப்படுகிறது. ஞாயிறு தினத்திலும் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது; 600 கிலோ வரை விற்பனையாகும் மீன், தற்போது 200 முதல் 250 கிலோ என விற்பனையாகிறது; 70 சதவீதம் வரை மீன் விற்பனை மந்தமடைந்துள்ளது. விற்பனை குறைந்ததால், மீன் கொள்முதலும் குறைக்ப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ