உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை

இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை

திருப்பூர் : குறை கேட்பு முகாம்களுக்கு வரும் மக்களிடம், பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக இடைத்தரகர்கள் பணம் பறித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என , எஸ்.பி., எச்சரித்துள்ளார். எஸ்.பி., பாலகிருஷ்ணன் அறிக்கை: வாரம்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் நேரடியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எஸ்.பி., டி.எஸ்.பி., அலுவலகங்கள் மற்றும் போலீஸ் ஸ்டேசன்களில் மக்கள் குறை கேட்பு முகாம்கள் நடக்கின்றன. இதை பயன்படுத்தி சில இடைத்தரகர்கள் மனு கொண்டு வரும் அப்பாவி பொதுமக்களை அணுகி, அவர்களின் பிரச்னைகளை முடித்து கொடுப்பதாக பொய்யான வாக்குறுதி கூறுகின்றனர்; அவர்களை அழைத்து வந்து, அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் போது, அதனை தாங்களே செய்து கொடுத்ததாக நம்ப வைத்து பணம் பறித்து ஏமாற்றுவதாக தெரிய வந்துள்ளது.பொதுமக்கள் மோசடி நபர்களை நம்பி ஏமாறாமல், தங்களது பிரச்னைகளை எவ்வித பயமும், தயக்கமும் இல்லாமல் எஸ்.பி.,யை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம். இடைத்தரகர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை