உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொபைல்போன் டவர் அகற்ற வேண்டுகோள்

மொபைல்போன் டவர் அகற்ற வேண்டுகோள்

திருப்பூர் : 'குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் டவர்களால், முருகம்பாளையம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது; கதிர்வீச்சு காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளதால், டவர்களை அகற்ற வேண்டும்,' என, பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.அம்மனு விவரம்:முருகம்பாளையம் எக்ஸ்டன்சன் ஆறாவது வீதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் மொபைல்போன் டவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டவர் அமைப்பதற்காக சாக்கடை, குடிநீர் வடிகால்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, பிரதான வழித்தடம் வழியாக கழிவுநீர் கொண்டு செல்லப்படுவதால், குடியிருப்பு பகுதி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, சிலர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நோய் தாக்கி விடுமோ என்ற அச்சத்துடனேயே குடியிருக்க வேண்டியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள டவர்களை பார்வையிட்டு, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி