உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி குழந்தைகள் தத்தெடுப்பு

பள்ளி குழந்தைகள் தத்தெடுப்பு

அவிநாசி : அவிநாசி அருகே சேவூரில் 18 குழந்தைகளுக்கு கல்வி சேவை அளிக்க தத்தெடுக்கப்பட்டனர். சேவூர் அரசு துவக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலர் ஸ்ரீசுதா தலைமை வகித்தார். பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் சாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சுப்ரமணியன் வரவேற்றார். விழாவில், 18 குழந்தைகளுக்கு அப் பகுதியை சேர்ந்தவர்கள், கல்வி பொருட்களை வழங்கி, ஆண்டு முழுவதும் கல்வி செலவை ஏற்று கொண்டனர். சேவூர் ஊராட்சி தலைவர் கலாவதி, துணை தலைவர் மனோகரன் உட்பட பலர் பேசினர்; குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி