உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு இன்று வெளியீடு

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு இன்று வெளியீடு

திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, மே, 10ல் வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில், 30 ஆயிரத்து, 180 பேர் தேர்வெழுதி, 27 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றனர். 2,301 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு ஜூலை, 2 முதல் ஜூலை, 8 வரை துணைத்தேர்வு நடத்தப்பட்டது.மாவட்டம் முழுதும், 11 மையங்களில், 3,243 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாகிறது. துணைத்தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் ரிசல்ட் பக்கத்தில் அறியலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி பெறுவோர் பிளஸ் 1 அல்லது டிப்ளமோ படிப்பில் இணைய தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என, பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.கடந்த, 2023ல், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 11வது இடம் பெற்ற திருப்பூர், 2024ல், பத்து இடங்கள் பின்தங்கி, 21வது இடம் பெற்றது. முந்தைய ஆண்டை விட அதிகளவில் மாணவ, மாணவியர், 2024ல் தேர்ச்சி பெறாததால், மாவட்டத்தின் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் நாளை (31ம் தேதி) வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி