மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
07-Aug-2024
உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள போடிபட்டியில், சின்ன வெங்காயம் அறுவடை செய்வதற்காக, 53 பெண்களை, சரக்கு வாகனத்தில், பொள்ளாச்சி ஆனைமலை, தென்குமாரபாளையத்தை சேர்ந்த குமாரசாமி,49, என்பவர் அழைத்து வந்தார்.நேற்று காலை, 8:00 மணிக்கு, உடுமலை - வாளவாடி ரோட்டில், அம்மாபட்டி பிரிவு அருகே வந்து போது, நிலை தடுமாறி சரக்கு வாகனம் கவிழ்ந்தது. பெண்களில் பலர் பள்ளத்தில் துாக்கி வீசப்பட்டும், வாகனத்தில் சிக்கியும் படுகாயமடைந்தனர்.இதில், வாகனத்தில் பயணித்த பொள்ளாச்சி தென்குமாரபாளையத்தை சேர்ந்த மாரியம்மாள், 52, சரஸ்வதி,70, அன்னபூரணி, 55, உடுமலை தேவனுார்புதுார் சின்னபொம்மன் சாளையை சேர்ந்த வெள்ளியம்மாள், 60, பார்வதி, 50, கருப்பாத்தாள், 58 உள்பட 19 பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ்கள் வாயிலாக, உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
07-Aug-2024