மேலும் செய்திகள்
குறுமைய கேரம் போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்
14-Aug-2024
குறுமைய கேரம் போட்டி மாணவ மாணவியர் ஆர்வம்
14-Aug-2024
திருப்பூர் : எஸ்.ஜி.எப்.ஐ., (ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா) கோவை மண்டல அணிக்கு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 19 வீரர், 12 வீராங்கனைகள் உட்பட, 31 பேர் தேர் வாகியுள்ளனர்.பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய, எஸ்.ஜி.எப்.ஐ., மண்டல அணித்தேர்வு, காங்கயம் அடுத்த நத்தக்காடையூர், பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரியில் ஆக., 31 மற்றும் செப்., 8 என இரு கட்டங்களாக நடந்தது. மாணவ, மாணவியர் பிரிவில், 765க்கும் மேற்பட்டோர், கூடைப்பந்து, ேஹண்ட்பால், கபடி அணிக்கான தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர். தேர்வானோர் விவரம்
மாணவர், 19 வயது பிரிவில், தாராபுரம், விவேகம் மெட்ரிக் கிருஷ்ணகுமார், எறிபந்து, 14 வயது பிரிவில் பொங்கலுார், ராஜா நேஷனல் பள்ளி மங்கலராஜன், காரத்தொழுவு, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிதாஸ், ஹரி கார்த்திக். பாண்டியன் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி விஷ்ணுபிரசாந்த்.பதினேழு வயது பிரிவில், கிட்ஸ் கிளப் மெட்ரிக் ஷியாம்ரஷ்வந்த், பிரன்ட்லைன் பள்ளி, ரோஹித்குமார். 19 வயது பிரிவில், காரத்தொழுவு, அரசு மேல்நிலைப்பள்ளி மாதேஷ், கிட்ஸ் கிளப் மெட்ரிக் விக்ரணி.கபடி, 14 வயது பிரிவில், அருள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி கோகுல பாண்டியன், 63 வேலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, திருச்செல்வம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சுகுமாறன், யுவராஜ்குமார்.பதினேழு வயது பிரிவில், அலங்கியம் அரசு பள்ளி மாதவன், நத்தக்காடையூர் அரசு பள்ளி சிவசங்கர், 63 வேலம்பாளையம் அரசு பள்ளி பிரவீன்குமார்.19 வயது பிரிவில், அவிநாசி அரசு ஆண்கள் பள்ளி மாணிக்கவேல், வி.கே., அரசு பள்ளி கவின்ராஜ், அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் பள்ளி சுரேந்தர். மாணவியர் அணி
எறிபந்து, 14 வயது பிரிவில், காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் மாணவியர் ஜோஷிகா, சம்யுக்தா, திருப்பூர், ராஜா நேஷனல் மெட்ரிக் மாணவி சலோமீ, திருப்பூர் செயிண்ட் ஜோசப் பள்ளி தருணியா, 17 வயது பிரிவில், காங்கயம் கார்மல் பள்ளி கார்த்திகா, 19 வயது பிரிவில், காங்கயம் குளோபல் மெட்ரிக் பள்ளி தாரணி, பவித்ரா இடம் பிடித்துள்ளனர்.மாணவியர் கபடி அணியில், 14 வயது பிரிவில், கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சுபஸ்ரீ, திருப்பூர், கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி தனிஷ்யா, 17 வயது பிரிவில், மூலனுார், பாரதி, வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவியர் கீர்த்தனா மற்றும் சகனா. 19 வயது பிரிவில், தாராபுரம், தளவாய்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி, ஸ்ரீ தேவி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
14-Aug-2024
14-Aug-2024