உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 45 நாள் பேமென்ட் விதிமுறை

45 நாள் பேமென்ட் விதிமுறை

திருப்பூர்: நடப்பு நிதியாண்டில், 45 நாட்களுக்குள் 'பேமென்ட்' செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், நிலுவையில் உள்ள 'ஜாப் ஒர்க்' கட்டணத்தை இம்மாத இறுதிக்குள் செலுத்துமாறு, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திருப்பூரில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர சாய ஆலைகள், பின்னலாடை தொழிலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 'ஜாப் ஒர்க்' தொழிலாகிய சாயத்தொழிலில், கட்டணம் பெறுவது சிரமமாக மாறியுள்ளது. ஏற்றுமதியாளர் மற்றும் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு, செலுத்த வேண்டிய கட்டணத்தை, உரிய காலத்துக்குள் செலுத்த வேண்டும். குறு, சிறு நிறுவனங்கள், குறைவான முதலீட்டில் பணிகளை செய்து வருகின்றன; கட்டணம் உரிய நேரத்தில் கிடைக்காத போது கடும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.குறிப்பிட்ட காலவரம்புக்குள், 'ஜாப் ஒர்க்' கட்டணங்கள், அனைத்து 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கும் கிடைக்க வேண்டும். அதனை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு, வருமானவரி சட்டத்தில், 43 பி (எச்) என்ற திருத்தத்தை செய்தது. கடந்த, 2024 ஏப்., 1 ம் தேதி முதல் அமல்படுத்தியும் உள்ளது.அதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்பிரிவை சேர்ந்த நிறுவனங்களுக்கு சேர வேண்டிய உற்பத்தி கட்டணங்களை, 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். குறித்த காலத்துக்குள் செலுத்தாதபட்சத்தில், நிலுவையில் உள்ள உற்பத்தி செலவினங்களும், வருமானமாக கருதி, வருமானவரி செலுத்த நேரிடும் என, அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறுகையில், ''புதிய சட்ட அறிவிப்பின்படி, 45 நாட்களுக்குள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கட்டணத்தை செலுத்தி பயனடைகின்றனர். திருத்தப்பட்ட வருமான வரி சட்டம் 43 பி (எச்) விதியை கருத்தில் கொண்டு, சாய ஆலைகளுக்கு செலுத்த வேண்டிய, நிலுவை 'ஜாப் ஒர்க்' கட்டணத்தை, இம்மாத இறுதிக்குள் செலுத்த ஏற்றுமதியாளர் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் வலியுறுத்திஉள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை