உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.1 லட்சம் லஞ்சம்; பொறியாளர் சஸ்பெண்ட்

ரூ.1 லட்சம் லஞ்சம்; பொறியாளர் சஸ்பெண்ட்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, நான்காவது மண்டல பொறியாளர் சுரேஷ்குமார், 39. மாநகராட்சி ரோடு பணி முடித்த ஒப்பந்ததாரர் கந்தசாமியிடம், பில்களை அனுமதிக்க, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதல்கட்டமாக, 1 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார்.இரண்டாம் கட்டமாக, 23ம் தேதி, 1 லட்சம் ரூபாயை அவர் பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், சுரேஷ்குமாரை, நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை