உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர்நிலையில் குப்பை மலை; மக்கள் நுாதன போராட்டம்

நீர்நிலையில் குப்பை மலை; மக்கள் நுாதன போராட்டம்

திருப்பூர் : தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதுார் ஊராட்சியில், சுப்பிரமணியபுரம் செல்லும் ரோட்டில், பழமையான குயவன் குட்டை உள்ளது.குட்டையில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கும் குப்பைகள்உள்ளிட்டவை கொட்டப்படுகிறது.கடும் துர்நாற்றம் வீசுவதோடு தோல் அலர்ஜி போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டது. ஆவேசமடைந்த அப்பகுதியினர் குப்பை கழிவுகளைக் கொட்டும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினர்.குயவன் குட்டையில் கொட்டப்பட்டுள்ள குப்பை மீது ஏறி போராட்டம் நடத்தப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அங்கு விரைந்தனர். குட்டையில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றவும், மேலும் கழிவுகள் அங்கு கொண்டு வந்து கொட்டாத வகையில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடு செய்யவும் உறுதி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை