உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முட்டை வாகனம் மீது மோதிய போலீஸ் வாகனம்

முட்டை வாகனம் மீது மோதிய போலீஸ் வாகனம்

காங்கேயம், கோவை மத்திய சிறையில் இருந்து நீதிமன்ற காவல் கைதிகள் மூன்று பேரை, திருச்சி மாவட்டம் தொட்டியம் கோர்ட்டுக்கு ஆஜர்படுத்த, போலீஸ் வாகனத்தில் நேற்று முன்தினம் காலை அழைத்து சென்றுள்ளனர். கோர்ட் பணிகளை முடித்து கோவை திரும்பினர். நள்ளிரவு, 12:00 மணியளவில், வெள்ளகோவில், குறுக்கத்தி அருகே முன்னால் சென்ற முட்டை வாகனம் மீது போலீஸ் வாகனம் மோதியது. இதில் கண்ணாடி மட்டுமே உடைந்தது. யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏதுமில்லை. திருப்பூரில் இருந்து வேறொரு போலீஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, அதில் கைதிகளை ஏற்றி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !