உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் கடை திறக்க தாமதித்தால் விற்பனையாளர் மீது நடவடிக்கை

ரேஷன் கடை திறக்க தாமதித்தால் விற்பனையாளர் மீது நடவடிக்கை

திருப்பூர்:''ரேஷன் கடைகளை வேலைநேரம் முழுவதும் செயல்படுத்தாத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன; 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள், அரிசி, பருப்பு உள்பட உணவுப்பொருட்கள் பெற்றுவருகின்றனர். சில ரேஷன்கடைகள் காலதாமதமாக திறக்கப்படுவதாகவும், முழுமையாக செயல்படுவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளது.இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்துக்கும், முதல்வரின் முகவரிக்கும் தொடர்ந்து புகார் அளித்துவருகின்றனர்.சமூக ஆர்வலரின் புகார் மனுவுக்கு, கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) பழனிச்சாமி அளித்துள்ள பதில்:திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படும் அனைத்து ரேஷன்கடைகளையும் உரிய நேரத்தில் திறந்து, வேலை நேரம் முழுவதும் செயல்படுத்தவேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது; உரிய நேரத்தில்ரேஷன் கடைகளை திறக்காத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பொது வினியோக திட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகள் மூலம், கடந்த மே மாதம், 11,843 டன் அரிசி, 921 டன் சர்க்கரை, 441 டன் கோதுமை,313 டன் துவரம்பருப்பு வினியோகிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ