உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 17 வயது சிறுமிக்கு திருமணம் பெற்றோர் மீது நடவடிக்கை

17 வயது சிறுமிக்கு திருமணம் பெற்றோர் மீது நடவடிக்கை

திருப்பூர், : பதினேழு வயது சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பெருமாநல்லுாரில் கடந்த, 9ம் தேதி குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக, 'சைல்டு ஹெல்ப்லைன்' எண்ணுக்கு காலை, 8:15 மணிக்கு தகவல் தெரிய வந்தது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே திருமணம் நடந்து முடிந்துவிட்டது.அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில், 17 வயதுடைய சிறுமிக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டதும்; அவருக்கு விருப்பமில்லாத நிலையில், 25 வயதான தாய்மாமன் மகனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிந்தது.இதனை தொடர்ந்து, சிறுமியை மீட்டு, காப்பகத்தில் தங்கவைத்தனர். திருமணத்தை நடத்திய இருதரப்பு குடும்பத்தார் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை