மேலும் செய்திகள்
ஜெ., பிறந்தநாள் விழா; கட்சியினர் கொண்டாட்டம்
25-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.மாநகராட்சி அலுவலகம் எதிரே நடந்த நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட ஜெ., படத்துக்கு, கட்சியினர் மலர்துாவி மரியாதை செய்தனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., சீனியம்மாள், எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கட்சியினர், 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியை உருவாக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்; வெற்றிக்கு அயராது பாடுபடுவோம்,' என்று உறுதிமொழி ஏற்றனர். அன்னதானம்
மாநகராட்சி 42வது வார்டில், ஜெ., பிறந்த நாள் விழாவையொட்டி தென்னம்பாளையம் பகுதி செயலாளர் அன்பகம் திருப்பதி தலைமையில் அன்னதானம் நடந்தது.திருப்பூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், பெருமாநல்லுார் நால் ரோடு சந்திப்பு அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார், தலைமை வகித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.l அ.தி.மு.க., சார்பில் மாநகராட்சி 32வது வார்டு அம்பேத்கர் நகரிலும், மாநகர் மாவட்டஎம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில், அவிநாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனியிலும் ஜெ., படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவிநாசி
அவிநாசி மேற்கு ஒன் றிய அ.தி.மு.க., சார்பில், கருவலுாரில் அன்னதானம் வழங்கும் விழா மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன்புதுாரில் ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர்தம்பி ராஜேந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.அவிநாசி நகர அ.தி.மு.க., சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பு ஜெ., படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசி நகர செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். பொங்கலுார்
எம்.எல்.ஏ., ஆனந்தன் தலைமையில், பொங்கலுாரில் ஜெ., உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பொங்கலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ரொட்டி, பால், பிஸ்கட் வழங்கப்பட்டது.
25-Feb-2025