கலைத்திருவிழா இன்று துவக்கம்
திருப்பூர் : வட்டார வளமைய உறுப்பினர்கள், உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை பேசியதாவது:அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கான கலைத்திருவிழா நடைபெற உள்ளது. வரும் 29ம் தேதி(இன்று) முதல் பள்ளி அளவிலான கலை போட்டிகள் துவங்குகின்றன. தொடர்ந்து வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நடைபெறும்.கலைத் திருவிழாவுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே பதிவு செய்துள்ளனர். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.மாவட்டத்தில், 254 நடுநிலைப்பள்ளிகளில், வரும், 31ம் தேதி, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், பள்ளியின் வளர்ச்சிக்கு கைகொடுக்கின்றன. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும்.