உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடிட்டிங் படிப்பில் அசத்தும் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி

ஆடிட்டிங் படிப்பில் அசத்தும் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி

திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி, ஆடிட்டிங் படிப்பில் அசத்தி வருகிறது.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே சி.ஏ., படிப்புக்கு என்று, முழு நேர பயிற்சி வகுப்புகளுடன் ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமி செயல்பட்டு வருகிறது. கடந்த, பத்து ஆண்டுகளாக சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வருகிறது.கடந்த, 2023 மே மாதம் நடந்த சி.ஏ., இன்டர் தேர்வில் ராஜேஷ், 626 மதிப்பெண்களுடன் தேசிய அளவில், 23வது இடத்தையும், காஸ்ட் அன்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங் பாடத்தில் ஜெயக்குமார், 97 மற்றும் விஷ்ணு பாண்டி, 96 மதிப்பெண் பெற்ற தேசிய அளவில் அசத்தினர்.கடந்த டிச., மாதம் நடந்த சி.ஏ. பவுண்டேஷன் தேர்வில், மதுமிதா, 329, ஏஞ்சல்,, 323, கங்காதேவி 316, ரித்திகா, 302 மதிப்பெண்களுடன் முதல், நான்கு இடங்களை பிடித்ததோடு, அனைவரும் டிஷ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்று அசத்தினர்.அனுபவம் வாய்ந்த ஆடிட்டர்களால் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இப்போது சி.ஏ., பவுண்டேஷன் மற்றும் இண்டர் வகுப்புகளுக்கான சேர்க்கை நடக்கிறது. பயிற்சி வகுப்பு ஏப்., 3வது வாரத்திலிருந்து துவங்க உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, 96009 - 22888 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை