மேலும் செய்திகள்
மதுவிலக்கு வாகனங்கள் ஏலம்
13-Feb-2025
அவிநாசி; அவிநாசி, மடத்துப்பாளையம் ரோடு, சிவகுமார் ரைஸ் மில் காம்பவுண்டில் இயங்கும் அவிநாசி மதுவிலக்கு பிரிவு ஸ்டேஷனில் பல்வேறு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 66 டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நேற்று பொது ஏலம் விடப்பட்டது.திருப்பூர் மாவட்டஎஸ்.பி., கிரிஷ் குமார் யாதவ் தலைமை வகித்தார். மதுவிலக்கு அம லாக்க ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன், கலால் உதவி ஆணையர் செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இதில், வாகன தணிக்கை பொறியாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் மதுவிலக்கு போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர். பொது ஏலத்தில், 54 வாகனங்கள் ஏலம் எடுக்கப்பட்டது. மொத்தம், 7 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது.
13-Feb-2025