உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் கார்டு எப்ப கிடைக்கும் பயனாளிகள் காத்திருப்பு

ரேஷன் கார்டு எப்ப கிடைக்கும் பயனாளிகள் காத்திருப்பு

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் விண்ணப்பங்கள், ரேஷன் கார்டு கேட்டு காத்திருக்கின்றன.தமிழக அரசு, ரேஷன் கார்டில் பெயர் உள்ள பெண்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில், பயனாளிகள் தேர்வு நடைபெற்றதால், கடந்த 2023 ஜூன் மாதம் முதல், புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டன. பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தாண்டு செப்டம்பர் மாதம் முதலே, மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுவருகிறது.ஆனாலும், விண்ணப்பித்து காத்திருக்கும் குடும்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்குவது குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆயிரக்கணக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள், ஒப்புதல் அளிக்கப்படாமலும்; ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, கார்டு அச்சிடப்படாமலும் தேக்கமடைந்துள்ளன.மார்ச் 16ம் தேதி லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தேர்தல் நடத்தைவிதிமுறைகள் அமலுக்குவந்தன.அதனால், கடந்த மூன்று மாதங்களாக புதிய ரேஷன் கார்டு வழங்க முடியவில்லை. விண்ணப்பித்து ஓராண்டாகியும், ரேஷன் கார்டு கிடைக்காமல், விரக்தியுடன் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை