மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி., கார்டு
31-Aug-2024
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், உதவி உபகரணங்களுக்கான பயனாளிகள் தேர்வு முகாம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த்ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 60 பேர் பங்கேற்றனர். இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், பேட்டரி வீல் சேர், காதொலி கருவிகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்பு அடிப்படையில், பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.----மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய டூவீலர் வழங்குவதற்காக தேர்வு, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
31-Aug-2024