உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை, ; பழநி மாவட்டத்துடன் உடுமலையை இணைக்கக்கூடாது என வலியுறுத்தி, உடுமலையில் பா.ஜ., வினர் ஆர்பாட்டம் நடத்தினர்.உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை, புதிதாக உருவாக்கப்படும் பழநி மாவட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,சார்பில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.பி.,கார்வேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜோதீஸ்வரி, விஜயராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை