உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் தொழிலாளர் பிரச்னை பி.எம்.எஸ்., ஆலோசனை

மின் தொழிலாளர் பிரச்னை பி.எம்.எஸ்., ஆலோசனை

திருப்பூர்: பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் (பி.எம்.எஸ்.,) சார்பில், திருப்பூர் திட்ட செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது.செயல் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கதிர்வேல், மின் பணிகள் தொடர்பாக பேசினார். மின்வாரிய தொழிலாளர்கள் வேலைப்பளு ஒப்பந்தம், ஊதிய உயர்வு ஒப்பந்தம், 'ஸ்மார்ட் மீட்டர்' வரும் சூழ்நிலையில் கணக்கீட்டாளர் பணி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பதவி மாற்றம் மற்றும் பதவி உயர்வு, 'கேங்மேன்' பணியாளர்கள் இடமாறுதல் உள்ளிட்ட தொழிலாளர் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.திட்ட துணை தலைவர் ஆனந்த்குமார், துணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், வெங்கடாசலமூர்த்தி, பொருளாளர் பூபதி, கோட்ட தலைவர் ராஜேஸ்குமார், கோட்ட செயலாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ