உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ராதாகிருஷ்ணன் விருது விண்ணப்பிக்க அழைப்பு

ராதாகிருஷ்ணன் விருது விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்;'மாநில அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்க நாளை (29 ம் தேதி) கடைசி நாள்,' என, கல்வித்துறை அறிவித்துள்ளது.மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு ' டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி மாநில அரசு கவுரவப்படுத்துகிறது.விருதை பெறுவோருக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். நடப்பாண்டுக்கான விருதுக்கு, இதுவரை மாநிலம் முழுதும் இருந்து, 425 பேர் விண்ணப்பித்த நிலையில், விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளை (29 ம் தேதி) முடிகிறது என கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ