உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிக்க அழைப்பு

பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்து வோர், பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில், 2024 ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும், 100 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனி நபர், உள்ளாட்சி அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்பு, பசுமை தொழில்நுட்பம் குறித்த விஞ்ஞான ஆய்வுகள், திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலை பாதுகாப்பு, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சியில் ஈடுபடுவோர் மற்றும் அமைப்புகளும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவினரால், தகுதியான மூன்று நிறுவனம், தனிநபர்களை தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும். www.tnpcb.gov.ib என்கிற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !