உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிறுவனத்தில் கையாடல்: ஊழியர் மீது வழக்குப்பதிவு

நிறுவனத்தில் கையாடல்: ஊழியர் மீது வழக்குப்பதிவு

திருப்பூர்;பணிபுரிந்த நிறுவனத்தில், கையாடல் செய்த ஊழியர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள 'கஸ் குளோதிங்' நிர்வாகம் சார்பில், எஸ்.பி.,யிடம் வழங் கிய புகார் மனுவில், 'எங்கள் நிறுவனத்தில், கடந்த, 9 ஆண்டுகளாக தொழிற்சாலை பிரிவில், தர்மராஜ் என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 2 ஆண்டுகளாக ஒப்பந்ததாரர்களின் வாரந்திர பில் தொகை பண பரிமாற்றத்தில், 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளார் என்பதை, கண்டறிந்துள்ளோம். அவர் மீது நடவடிக்கை எடுத்து, தொகையை திரும்ப பெற்றுத்தர வேண்டும்,' எனக் கூறியுள்ளார்.புகார் குறித்து விசாரித்த திருப்பூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், தர்மராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ