உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொட்டு நீரில் சின்னவெங்காயம் நீர் சிக்கனத்துக்கு முயற்சி

சொட்டு நீரில் சின்னவெங்காயம் நீர் சிக்கனத்துக்கு முயற்சி

உடுமலை;சொட்டு நீர் பாசனம் மற்றும் நீரில் கரையும் உரங்களை பயன்படுத்தி, சின்னவெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், இரு சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செலவு மற்றும் தண்ணீர் தேவை இச்சாகுபடிக்கு அதிகமாகும். எனவே, நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பதில்லாத சீசன்களில் சின்னவெங்காயம் சாகுபடி செய்து வந்தனர்.தற்போது, குறைந்த தண்ணீரிலும் சாகுபடி மேற்கொள்ள, சொட்டு நீர் பாசன முறையை பின்பற்றுகின்றனர்.இதனால், கிணறு மற்றும் போர்வெல்களில், குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும், குறைந்த பரப்பில் சின்னவெங்காயம் சாகுபடி செய்ய முடிகிறது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், சொட்டு நீர் வாயிலாக நேரடியாக நீரில் கரையும் உரங்களை பயன்படுத்தி, பயிருக்கு செலுத்த முடியும். இதனால், சாகுபடி செலவும், தொழிலாளர்கள் தேவையும் குறைகிறது.களைகளையும் கட்டுப்படுத்த முடிகிறது. 'இச்சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு கூடுதல் நிதி ஒதுக்கி மானியம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்,' என விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ